• Apr 01 2023

லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பே இல்லை; அடித்துக்கூறும் பிரபலம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜூடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் லியோ.இப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளால்,இப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 லியோ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்ன குமார், விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் வகையில், சந்தானம் அணிந்த கண்ணாடியை ஒரு கையில் வைத்து இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, இறப்பை சொல்லாதே என பதிவிட்டு இருந்தார்.


இதைப்பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அதைத்தான் ரத்னகுமார் சூசகமாக கூறியுள்ளார் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி,பிரபல சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் லியோ படத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவரிடம் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கிறாரா என்று கேட்டேன். அவர் கண்டிப்பா இல்லை என்று கூறினார். 


ஆனால், ரத்னகுமார் அதே படத்தில் வேலை செய்கிறார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் என்பதால், இவர் சொல்லும் தகவலை வதந்தி என்று ஒதுக்கிவிட முடியாது.ஒருவேளை விஜய்சேதுபதி இந்தபடத்தில் நடிக்கிறார் என்றால் லியோ படத்தின் தயாரிப்பாளர் அதற்கு உடன்பட வேண்டும். 

நான் கேள்விபட்ட தகவலின் படி, விஜய்சேதுபதிக்கும் தயாரிப்பாளர் லலித்திற்கும் அண்மையில் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது. அதாவது விஜய்சேதுபதி, லலித்தை பற்றி வேறு ஒரு இயக்குநரிடம் கருத்தை சொல்ல, அந்த தகவல் லலித்தின் காதுக்கு வந்ததால், கடுப்பான லலித், விஜய்சேதுபதியின் அலுவலகத்திற்கே நேரடியாக சென்று விஜய்சேதுபதியிடம் சண்டை போட்டு, இரண்டு படத்திற்கு கொடுத்த அட்வான்சை கொடு என்று கேட்டுவாங்கி உள்ளார்.


அப்படி இருவருக்கு இடையேயும் மோதல், மனக்கசப்பு இருக்கும் போது விஜய்சேதுபதி நிச்சயம் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்கு தெரிகிறது. இருந்தாலும், படம் குறித்து ஏதாவது பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே ரத்னகுமார் இப்படி செய்கிறாரா என்று தெரியவில்லை என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement