• Sep 22 2023

இதனால எனக்கு Breakup ஆகிடிச்சு,கல்யாணம் பண்ணிக்க Ready-ஆ இல்ல- ஓபனாகப் பேசிய நடிகை கௌசல்யா

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் 90ல் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.  

இவரின் முதல் படம் மலையாளமாக இருந்தாலும், இவரை பிரபலமாக்கியது தமிழ் சினிமாவே. இவர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் 'கௌசல்யா' என்கிற பெயரில் அறிமுகமான நிலையில், இப்படம் பயங்கர வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்றே மாற்றிக்கொண்டார்.  


தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் இவர், 42 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில்  எனக்க பிரேக் ஆகிடுச்சு. அதுக்கு காரணம் நான் சினிமாவில படம் நடிச்சிட்டு இருக்கும் போது கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னாரு.


அவருக்கு என்னை விட 5 வயது அதிகம்.அவர் கேட்ட டைம்ல நான் சினிமாவில் பிஸியாக நடிச்சிட்டு இருந்தேன். அந்த காலத்தில கல்யாணம் பண்ணினால் நடிக்க முடியாது. அவரக்கும் வயது போய்ட்டு இருக்கு. அதனாலேயே இருவரும் பிரிஞ்சிட்டோம். கல்யாணம் என்பது பெரிய விஷயம் அதைக் கவனமாகத் தான் பண்ணனும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement