• Feb 02 2023

நாங்க ஞாபகம் இல்லை...அவ ஞாபகம் இருக்காளா... அமுதவாணனை விளாசிய அவரது மனைவி...நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 79வது எபிசோட்டில் என்ன நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..

21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான பிக்பாஸில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்திருந்தனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இதனையடுத்து, அமுதவாணனின் மனைவி மற்றும் மகன்கள் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்தனர்.


இந்த நிலையில், மைனா நந்தினிக்கு அவரது கணவர் யோகேஷ் அறிவுரை கொடுத்தது தொடர்பான விஷயமும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. "இந்த பிக்பாஸ் ஷோக்கு நீ லாயக்கு இல்ல. இந்த பிக் பாஸ் ஷோக்கும் உனக்கு தகுதியே இல்ல புரியுதா. அப்படி தான் நீ விளையாடிட்டு இருக்கே. நான் சொல்ற பாயிண்ட்டு தப்புன்னு எனக்கு நிரூபிச்சு காட்டு. ஒரு தப்பு நடக்கும் போது அத தட்டி கேட்கணும். நீ கேக்குறதுக்கு யோசிக்குறே.


அந்த Self Respect நம்மள ஏதாவது பேசிருவங்களோன்னு பயம் இருக்குல்ல அது வேணாம்ங்குறேன். கேம வந்து நீங்க 100 சதவீதம் குடுங்க. அப்ப தான் இவங்க நல்லா விளையாடுறாங்கன்னு ஒரு எண்ணம் வரும்" என யோகேஷ் மைனா நந்தினியிடம் அறிவுறுத்தி இருந்தார்.

அதே போல விக்ரமனை குறிப்பிட்டு பேசிய யோகேஷ், "விக்ரமன் வந்து எல்லா பாயிண்ட்டையும் கேக்குறாருல்ல. அவரு யாரையுமே பாக்குறதில்ல. ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் விக்ரமனை. உன் கண்ணுல படுது, நீ அத கேக்கமாட்டேங்குறே. எனக்கு அது மட்டும் தான் குறை" என யோகேஷ் கூறினார்.

இவ்வாறுஇருக்கையில் ஷிவின் எங்க வீட்டில் இருந்து யாரும் உள்ளே வரமாட்டாங்க..எனக்கு யார் வரப்போறாங்க என அழுதிட்டு இருக்கும் போது ஷிவின் நணபர்கள் வந்து இருந்தனர்.ஷிவின் உடனே அழுதிட்டு இருந்தார்.அவங்க அம்மா கமரா முன் தனது முகத்தை காட்ட விரும்பவில்லையாம்.அத்தோடு ஷிவினை காண வெளியே காத்துக்கொண்டு இருக்கிறார்களாம்.

அதன் பிறகு அமுதவாணனின் குடும்பம் வந்து இருந்தார்கள்.அதனை அப்படியே ஒரு கலகலப்பான தருணமாக மாற்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார் அமுதவாணனின் மகன். தந்தையை போல அவருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும் என சில போட்டியாளர்கள் சிறுவனிடம் கேட்கின்றனர். அதன் பின்னர், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை போல அப்படியே அமுதவாணனின் மகன் இமிடேட் செய்து வசனங்களையும் அப்படியே பேசுகி அனைவரையும் அவர் பங்கம் செய்கிறார்.


இதனைக் கண்டு அனைத்து போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்க, தந்தையை போலவே சிறுவனும் அசத்தலாக காமெடி செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது. வருங்காலத்தில் சிறந்த ஒரு ஆளாக சிறுவன் வருவான் என்றும் ஏரளமானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.


இவ்வாறுஇருக்கையில் எங்களை நினைச்சு கூட நீங்க அழவில்லை...யார் அந்த ஜனனி..அவங்க போனதிற்கு விழுந்து விழுந்து அழுகிறீங்க என தாறுமாறாக கேள்வி கேட்டு இருந்தார் அமுதவாணனின் மனைவி.அத்தோடு தனலட்சுமி வெளியில் போயிட்டாங்க...அவங்க நல்லா விளையாடின பெண்ணு ஆனா ஜனனி என்ன செய்தாங்க..என தாறுமாறாய் கேள்வி கேட்டார்.இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
Advertisement

Advertisement

Advertisement