• Jul 02 2024

நம்ம காஜல் மகனா இது... என்ன இவளோ அழகா இருக்காரு... வைரலாகும் புகைப்படம்...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஹிந்தியில் உமா மற்றும் தெலுங்கில் சத்யபாமா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.


கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு காஜல் அகர்வாலுக்கு  அழகான மகன் பிறந்தார்.மகனுக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார் காஜல் அகர்வால்.


காஜலின் மகனை கைக்குழந்தையாக தான் பலரும் பார்த்தோம். ஆனால், நீலின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், காஜல் அகர்வால் மகனா இது, என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார். காஜல் அகர்வால் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement