• Aug 04 2025

ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த நக்‌ஷத்ரா.! இன்ஸ்டாவில் வைரலான லேட்டஸ்ட் லுக்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல்களில் தோன்றும் நடிகைகள் இன்று சினிமா நடிகைகளுக்கு சமமான அளவில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். அவர்களின் நடிப்பு, அழகு ஆகிய ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அத்தகைய ஒரு டாப் சீரியல் நடிகையாக தற்போது 'லட்சுமி ஸ்டோர்ஸ்' புகழ் நக்‌ஷத்ரா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.


இந்நிலையில், நக்‌ஷத்ரா அண்மையில் எடுத்துக்கொண்ட சேலை போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் மின்னலாய் பரவி வருகிறது. பாரம்பரிய தமிழ்ச்சேலையில் தன்னை காட்சிப்படுத்திய அவர், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள், "Beautiful.." என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போட்டோஷூட் வைரலான பிறகு, நக்‌ஷத்ராவின் Instagram பக்கத்தில் follower-ன் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.


Advertisement

Advertisement