• Feb 05 2025

"கங்குவா படத்தின் அருமை பாகம் 2 இல் தெரியும்"நட்டி நட்ராஜ் தகவல்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அண்மையில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா,யோகிபாபு,கோவை சரளா ,நட்டி நட்ராஜ் ,கருணாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய கங்குவா திரைப்படம் வெளியாகியவுடன் பல தேவையற்ற விமர்சனங்களின் காரணமாக படம் தோல்வியை சந்தித்துள்ளது.


சத்தம் அதிகமாகவுள்ளது,படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்தமையினால் அதனை சரி செய்து படத்தினை திருப்பி ரிலீஸ் செய்தும் வசூலிற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்பட்டது.


350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு வசூல் அளவு 100 கோடியினை தாண்டாமையினால் படக்குழு உட்பட சூர்யாவும் கவலைக்கு ஆளாகினர்.இருப்பினும் OTT வெளியாகி ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.இந்நிலையில் தற்போது கங்குவா படத்தில் நடித்த நாட்டி நட்ராஜ் அவர்கள் "கங்குவா படத்தின் அருமை அதன் 2-ஆம் பாகத்தில் தான் தெரியும்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement