• Dec 25 2024

பிக்பாஸில் வித்தியாசமாக வைக்கப்பட்ட Freeze டாஸ்க்..! இன்ப அதிர்ச்சியில் தீபக்

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 11 வாரத்தை கடந்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களிலேயே இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. ஆனாலும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் பண்ணுவார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றைய நாளில் இடம்பெற்ற Freeze டாஸ்க்கில்  வித்தியாசமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது இந்த சீசனோட ட்பிரீ டாஸ்க்கில் மார்னிங் சாங் போடுவதற்கு முன்பே போட்டியாளர் ஒருவரின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுத்து உள்ளனர்.


அது யாருடைய பேமிலி என்றால் தீபக்கின் பேமிலி தான். இதை பார்த்து அரைத்தூக்கத்தில் இருந்த எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் இன்றைய தினம் மொத்தமாக நான்கு போட்டியாளர்களின் ஃபேமிலிஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்கள்.

முதலாவதாக தீபக்கின் ஃபேமிலி, இரண்டாவதாக மஞ்சரியின் பையன், மூன்றாவதாக ராஜன் அவர்களுடைய அம்மாவும் சிஸ்டரும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளார்கள்.

இறுதியாக விஜே விஷாலின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளார்கள். எனவே இவ்வாறு உள்ளே வரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவர்களுக்கு சொல்ல போகும் அட்வைஸ் என்ன? கண்டிப்பு என்ன? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement