• Dec 25 2024

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஏமார்ந்த மனோஜ்.. அதிர்ச்சியில் ரோகினிக்கு நடந்த விபரீதம்?

Aathira / 21 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டின் உரிமையாளர் இது என்னுடைய வீடு. இந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தான் உங்களை ஏமாற்றி இருக்கின்றார்.. உடனடியாக வீட்டை காலி பண்ணுமாறு சொல்லுகிறார்.

இதைக் கேட்டு மனோஜ், ரோகினி பேரதிர்ச்சியில் இடிந்து போய் அழுகின்றார்கள். மேலும் ரோகிணி நாம ஏமாந்துட்டோமா..? என மயங்கியே விழுகின்றார். விஜயா இதைக்கேட்டு நெஞ்சில் அடித்து கதறுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி பண்ணுமாறு சொல்ல, நாமும் ஏமாந்து இருக்கிறோம்.. 30 லட்சம் கொடுத்து இருக்கிறோம்.. அது எப்படி வீட்டை விட்டு போறது என்றும் மனோஜ் கேட்க, அப்படி என்றால் இன்னும் கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்துவிடும் என்று உரிமையாளர் சொல்லுகின்றார்.

அதன்படியே போலீஸ் வந்து மொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு போகுமாறு சொல்லுகின்றது. அந்த நேரத்தில் மனோஜ் வீட்டுக்கு வைத்த பெயரின் நேம் போர்டு வருகின்றது. அதன் பின்பு வீட்டுக்கு வந்த மனோஜ்க்கு அண்ணாமலை, இப்படி ஏமாளியாக இருப்பியா? என்று அடிக்கப் போகின்றார்.


இதன் போது முத்துவும் நான் அப்பவே சொன்னேன். அவன் வாடக கார்ல போறான்.. சந்தேகமா இருக்கு.. என்று மீனாவும் அபசகுணம் என்று கோவிலில் வைத்து சொல்லியே இருக்கா.. அதையெல்லாம் கேட்டு இருந்தா இப்படி நடந்து இருக்காது என்று சொல்லுகின்றார். இதைக் கேட்ட ரோகிணி நாம ஏமாந்துட்டோம் என்று சந்தோஷப்படுகின்றார் என்று முத்துவிடம் கேட்கின்றார்.

இறுதியில் முத்து மலேசியா மாமாவுக்கு நடந்த விஷயத்தை சொல்லி காசு கேட்க சொல்லுகின்றார். விஜயாவும் அது சரியான தலையாட்ட, ரோகிணி அப்பாவுக்கு இன்னும் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கல, அப்பா ஜெயிலில் தான் இருக்கின்றார் என்று சொல்லி சமாளிக்கின்றார். அண்ணாமலை முத்துவிடம் மனோஜை ஏமாற்றிய நபரை பற்றி விசாரிக்குமாறு சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்..

Advertisement

Advertisement