• May 18 2024

என்னுடைய முதல் காதல் அந்த பொண்ணு தான்- ஓபனாகப் பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதிலும் முத்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

அதில் முத்து என்னும் காரெக்டரில் வெற்றி என்பவர் நடித்து வருகின்றார். இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நீங்க சிங்கிளா என்று கேட்ட போது நான் இன்னும் திருமணம் முடிக்காத சிங்கிளாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.


அப்போது உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்க என்று கேட்ட போது நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கிறேன்.காலேஜ் முடிச்சதுக்கப்புறம் அந்தப் பொண்ணு வந்து சொல்லிச்சு. ஆனால் நான் சினிமாவிற்குள் போகப் போறேன் என்று முடிவெடுத்ததால் அந்த லவ்வை ஏற்றுக் கொள்ளல.


அதுக்கு பிறகு நிறைய பேர் மேல லவ் வந்திச்சு. ஆனால் நான் யார் கிட்டையும் சொல்லிக்கல. ஒரு நாள் லைவ்வில் பேசிட்டு இருக்கும் போது எங்க அப்பா போன் பண்ணி எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க,அரேஜ் மேரேஜ்ஜா அல்லது லவ் மேரேஜ்ஜா என்று கேட்டாரு.அதுக்கு பிறகு நான் அவருக்கு போன் எடுத்தேன்.ஆனால் அவரு எடுக்கல.இப்பவரைக்கும் நான் யாரையும் லவ் பண்ணல என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement