• May 01 2024

மியூசிக் வேர்க் சூப்பராக போய்ட்டு இருக்கு- தளபதி 68 படம் குறித்து மாஸான அப்டேட்டை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெறவுள்ளது என்று கூறப்படுகின்றது.

இதனை அடுத்து விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இவர் நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.இதே போல விஜய்க்கும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


தளபதி 68' மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. ஜெய், பிரபுதேவா, மாதவன், பிரசாந்த் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் அண்மையில் யுவன் சங்கர் ரஜா அண்மையில் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அதில் தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டனர். அதற்கு யுவன் சங்கர் ராஜா சூப்பராக இருக்கும் ,மியூசிக் வேர்க் போய்ட்டு இருக்கு என்று கூறியுள்ளார் என்பதும் குறப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement