• May 05 2024

பிரபல நடிகை பெயரில் நடக்கும் பண மோசடி! ரசிகர்களுக்கு அலர்ட் - நடந்த பின்னணி என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையை சேர்ந்த மாடல் அழகியான கோமல் ஷர்மா தமிழ், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.அரபிக் கடலின் சிங்கம் மற்றும் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் பாரோஸ் உள்ளிட்ட படங்களிலும் கோமல் ஷர்மா நடித்து வருகிறார்.

 சட்டப்படி குற்றம் படத்தின் மூலம் 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கோமல் ஷர்மா. நாகராஜன் சோழன் எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், தற்போது ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் வெளியான ஹங்காமா 2 படத்தில் நடித்த இவர் மோகன்லால் இயக்கி நடித்து வரும் பாரோஸ் எனும் மலையாளப் படத்திலும் படு பிசியாக நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கோமல் ஷர்மா பெயரிலேயே மர்ம நபர் ஒருவர் பண மோசடி வேலையை பார்த்துள்ள விஷயம் நடிகைக்கே தெரிந்து ஷாக் ஆனார்.

நடிகையின் பெயர் மற்றும் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சரில் வைத்து ஆசை வலை காட்டியும் பணம் பறித்தும் அந்த நபர் வருவதாக கூறுகின்றனர்.

 இந்நிலையில், அந்த நபரின் நம்பரை ஷேர் செய்த நடிகை கோமல் ஷர்மா இது என் பெயரில் இருக்கும் போலியான போன் நம்பர் என்றும் இதன் மூலம் பண மோசடி நடக்கிறது. யாரும், இந்த மோசடி வலையில் விழுந்து விட வேண்டாம். எச்சரிக்கையாக இருங்க, நான் யாரிடமும் பணம் கேட்கப் போவதில்லை. யாராவது என் பெயரை பயன்படுத்தி சந்தேகப்படும்படி மெசேஜ் செய்தால் உடனடியாக உஷாராகி விடுங்க என்று எச்சரிக்கை செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement