• Jun 13 2026

ஸ்ருதியின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் மீனா.. கூடவே ஆட்டம் போடும் பார்வதி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் முக்கிய கதாநாயகியாக திகழ்பவர் தான் கோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஏழை வீட்டுப் பெண் என்ற காரணத்தால் மாமியார் வீட்டில் பல இன்னல்களை எதிர்கொள்கிறார் மீனா. ஆனாலும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு குடும்பம் நிலைகுலையாமல் தனது கணவரையும் பார்த்து மாமியார் மாமனாரையும் கவனித்து வருகிறார். மீனாவின் குடும்பத்தை எத்தனை முறை விஜயா அசிங்கப்படுத்தினாலும் குடும்பத்தை விட்டு பிரியாமல் எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளும் ஒரு கேரக்டராக இவரது கேரக்டர் காணப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் காணப்படும் அச்சோ அச்சோ பாடலுக்கு மீனாவும் பார்வதியும் சேர்ந்து டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து உள்ளார்கள். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது. ஏற்கனவே இந்த பாடலுக்கு இந்த சீரியலில் நடித்த ஸ்ருதி  குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது மீனாவும் அந்த பாடலுக்கு செம்மையாக நடனம் ஆடியுள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement