• May 19 2024

உங்கள் வெற்றிப் பயணம் சிறப்பாக அமையட்டும்-ஆருயிர் நண்பர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்-

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகக் கருதப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒரு நடிகர் முன்னணி நடிகராக எத்தனை வருடம் இருந்து விட முடியும்? ஏற்ற இறக்கம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் பொதுவான ஒன்று. 

ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு முன்பு இத்தனை ஆண்டுகாலம், தமிழ் சினிமாவின் அரியணையை யாரும் இப்படி அலங்கரிக்கவில்லை. அவருக்கு பின்பும் யாரும் அதை செய்யப்போவதில்லை என ரசிகர்கள் கூறி வருவதுண்டு.


ரஜினியின் திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவர் மேலுள்ள க்ரேஸ் மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரையும் தனது ஸ்டைலால் கவர்ந்துள்ள ரஜினிக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச் சிறந்த நாளில் வாழ்த்துகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement