• May 08 2024

காலில் விழுந்த லாரன்ஸ்... கழுவி ஊற்றிய ப்ளூசட்டை மாறன்... கடுப்பில் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ரிலீசிற்குத் தயாராகியுள்ளது.


ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.


சந்திரமுகி-1 ஐப் போலவே சந்திரமுகி-2வும் த்ரில்லிங்கான காட்சிகளுடன் அட்டகாசமாக இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படம் நாளை மறுதினம் வெளியாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.


இது குறித்த புகைப்படஙக்ளையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் லாரன்ஸை வம்பிழுக்க தொடங்கி விட்டார்.


அதாவது இதுகுறித்த தனது பதிவில் "இன்னொரு மனிதரின் காலில் விழுவதென்பது தனிப்பட்ட செயல். அதையும் போட்டோ எடுத்து மீடியாவிற்கு அனுப்பி விளம்பரம் செய்கிறார் மினி சூப்பர். இவராவது வீட்டுக்கு உள்ளே காலில் விழுந்து போட்டா எடுத்தார். அவரோ.. யோகியின் வீட்டு வாசலிலேயே காலில் விழுந்தார். பப்ளிசிட்டி தேடுவதில்.. தலைவர் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


இவ்வாறாக ராகவா லாரன்ஸுடன் சேர்த்து ரஜினிகாந்தையும் கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவரின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement