• May 08 2024

மண்ணை விட்டுச் சென்றார் மனோபாலா... நடைபெற்று முடிந்த இறுதி ஊர்வலம்... மலை போல் குவிந்த மக்கள்..!.

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்றைய தினம் காலமானார். அந்தவகையில் 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் யாருமே எதிர்பாராத நேரத்தில் நேற்றைய தினம் அவர் உயிர் பிரிந்தது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது மனோபாலாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மாபெரும் கலைஞனான மனோபாலாவின் உடல் தற்போது தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த காட்சியானது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது.   


Advertisement

Advertisement

Advertisement