• Jan 19 2025

மார்போடு அணைத்து ஓவர் டோஸில் மஞ்சுவாரியர் போஸ்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ள நிலையில் தற்போது ’ஃபுட்டேஜ்’ என்ற மலையாள படத்தின் போஸ்டரில் ஓவர்டோஸ் கிளாமர் போஸ் கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த போஸ்டரை பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர். 

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மஞ்சுவாரியர் தமிழில் தனுஷ் நடித்த ’அசுரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் நடித்த அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ’வேட்டையன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் மஞ்சுவாரியர் நடித்து வரும் படங்களில் ஒன்று ’ஃபுட்டேஜ்’.   மலையாளத்தில் உருவாகி வரும் இந்த படத்தை எடிடட்ர் ஸ்ரீதரன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் நாயகன் விஷால் நாயரை மார்போடு அனைத்து நெருக்கமான கிளாமர் போஸ் மஞ்சுவாரியர் கொடுத்துள்ளார்.ஹீரோவின் மடியில் ஏறி அமர்ந்து மஞ்சு வாரியர் தனது மார்போடு அணைத்துக் கொண்டு கொடுத்துள்ள போஸ் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

இந்த போஸ்டர்  ரசிகர்களை ஒரு பக்கம் அதிர்ச்சி அடைய செய்தாலும் இன்னொரு பக்கம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த போஸ்டரை மஞ்சுவாரியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில் அதில் ’ஒவ்வொரு கதவுக்கு பின்னால் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகம் ஒன்று உள்ளது’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி அசோக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement