• Apr 30 2024

மாவீரனால் வேறுவழியின்றி... ஓடிடி ரிலீஸிற்குத் தயாரான 'மாமன்னன்'... அதுவும் எப்போ தெரியுமா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.


மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படமானது கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.


இப்படமானது வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும், அமோக வசூலையும் வாரிக்குவித்து வருகின்றது.  இப்படத்தினைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' வெளியாகி இருந்தது. இப்படமும் அமோக வசூல் வேட்டையினை நடாத்தி வருகின்றது.

இந்நிலையில் உதயநிதியின் 'மாமன்னன்' படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement