• Dec 04 2023

கவலையுடன் இருக்கும் கங்கா, ஆறுதல் சொல்லும் குமரன்... வெளியானது மகாநதி சீரியல் ப்ரோமோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் தந்தையை இழந்த ஐந்து சகோதரிகளின் கதை தான் "மகாநதி " . இப்பொது ரொம்ப பரபரப்பா ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் வரிசையில் இதுவும் ஒன்று. இப்போது இந்த சீரியலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


சொந்த ஊர்ல இருந்து சென்னைக்கு வந்த காவேரி குடும்பம் இருக்குறதுக்கு வீடு தேடி ஒவ்வொரு இடமா போகிறார்கள். இன்று ரிலீஸ் ஆன ப்ரோமோ வீடியோவில் கங்கா  மற்றும் காவேரி வீடு பாக்குறதுக்காக போயிட்டு வரும் போது சாரதா " வீடு பாக்க போனீங்களே என்னாச்சி " என்று கேட்க காவேரி " நம்ப வேற நல்ல வீடு பாக்கலாம் அங்க ஏதோ ஒன்னு சரி இல்ல " என்று சொல்லுறாங்க. 


 "என்ன சரியில்ல' என்று சாரதா சந்தேகத்தோடு கேட்கவும் காவேரி "ஒன்னும் சரி இல்லனு சொல்றேன்  நீ வா " என்று சொல்லி சாரதாவ  கூட்டிட்டு போறாங்க. ரொம்ப கவலையோடு இருக்குற கங்காவ பாத்து குமரன்  'என்னாச்சி கங்கா  ஏன் ஒரு மாதிரி இருக்க ஏதாவது பிரச்சினையா" என்று கேக்குறாரு. 


கங்கா " நம்பளுக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது என்னால அவங்க கஷ்டப்படுறத பாக்க முடியலைங்க " என்று அழுத்திட்டே சொல்லுறாங்க. இத கேட்டு குமரன்  "  எல்லா பிரச்சினையும் சரியாகிரும் , உங்களுக்காக நா இருக்கான் எப்போவும்" என்று கங்காவுக்கு ஆறுதல் சொல்லறாரு. கங்கா கவலைப்பட்டு அழும் அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .    

 


Advertisement

Advertisement

Advertisement