• May 09 2024

மச்சினன் தனுஷிற்கு தாய் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துக் கூறிய செல்வராகனின் மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நடிகராக இல்லாமல் இந்திய நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 4 திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இவை அனைத்தும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இவர் கடந்த 28ம் திகதி தனது 39வது பிறந்த தினத்தைத் கொண்டாடினார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இவரின் அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் வாழ்த்துக் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளுடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருக்க நீங்கள் மட்டும் அறிவில் முதிர்ச்சி அடைகிறீர்களே தவிர வயதாகவில்லை. அந்த ரகசியத்தை சொல்லவும்.

இந்த வருடம் சிறப்பானதாக அமையட்டும் என வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தாய் ஸ்தானத்திலிருந்து தனுஷை வாழ்த்தி உள்ளார் என கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் தனுசுக்கு மட்டும் வயசு ஆகாதா என கேட்டு வந்த நிலையில் தற்பொழுது அண்ணி கீதாஞ்சலியும் அதையே கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement