• May 08 2024

லொஸ்லியா ஏன்மா இந்த திடீர் முடிவு... உடையில் பாதியை காணமே... கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்வதற்காக முயன்று கொண்டிருக்கும் ஒரு இளம் நடிகையே லொஸ்லியா. இவர் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றான சக்தி டீவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர் இந்திய தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' என்ற நிகழ்ச்சியின் 3-ஆவது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 



இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனது சக போட்டியாளரான நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டிருந்தார். அதன்பின் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கவினுடனான காதலை பிரேக் அப் செய்தார். இந்நிகழ்ச்சியில் அதிகளவான ரசிகர்களின் மனங்களை தனது குறும்புத்தனமான செயற்பாடுகளின் மூலமாக கவர்ந்திருந்தார்.




இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லொஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் வந்து குவிந்தன. அதன்படி அவர் நடிப்பில் முதலாவதாக வெளிவந்த படம் 'பிரெண்ட்ஷிப்'. இப்படமே இவருக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தையும் கொடுத்திருந்தது. மேலும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. மலையாள படத்தின் ரீமேக் ஆன இப்படம் ஆனது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.



இப்படத்தின் தோல்வியினால் மனம் கலங்காது தொடர்ந்து பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்கு ஜோடியாக 'கூகுள் குட்டப்பா' என்ற படத்தில் நடித்தார். இப்படமும் மலையாளத்தில் வெளியான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்ற படத்தின் ரீமேக் ஆகவே உருவாகி இருந்தது. இப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருந்தார். இப்படமும் சமீபத்தில் வெளியாகி பிளாப் ஆனது.


இவ்வாறாக லொஸ்லியா நடிப்பில் வெளியாகி வருகின்ற படங்களெல்லாம் அடுத்தடுத்து பிளாப் ஆகி வருகின்றது. இதனால் தன்னுடைய ரூட்டை மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கின்றார் லொஸ்லியா. அதாவது படு கவர்ச்சி ரூட்டுக்கு தற்போது தாவி உள்ளார். அந்த வகையில் கிழிந்து தொங்கும் வகையில் உடையணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடாத்தியிருக்கின்றார். அப்புகைப்படங்களானவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 




இதன் மூலமாக லொஸ்லியா தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "ஏன் இந்த திடீர் முடிவு, உங்க உடையில் பாதியை காணவில்லையே" எனக் கிண்டலாக கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement