சிறிய நகைச்சுவை வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற யூடியூப்பர் ஹர்ஷத் கான் இவர் சமீபத்தில் வெளியாகிய "டிராகன் " திரைப்படத்தின் மூலம் குட்டி டிரகனாக நடித்து பட்டையை கிளப்பினார். இந்த படத்தின் பின்னர் இவருக்கு பல படவாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது இது என்னோட சின்ன ஸ்டார்ட் என சொல்லி ரம்ஜானை முன்னிட்டு கருணை இல்லம் ஒன்றிற்கு சிறிய பண உதவி ஒன்றினை செய்துள்ளார். படிப்பையும் பேஷனையும் வைத்து சில மிமிக்கிரி வீடியோக்களை செய்து இன்று ஒரு ஹீரோவாக உயர்ந்திருக்கும் இவர் செய்த இந்த காரியம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
vj சித்துவுடன் இணைந்து பல யூடியூப் வீடியோக்களை செய்து வந்த இவர் அதன் மூலம் சம்பாதித்த பணத்தினை தொடர்ந்தும் இது போன்று செய்ய இருப்பதாக மறைமுகமாக கூறியுள்ளார். இவர் குறித்த வீடியோவினை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இவரது பதிவிற்கு vj சித்து கமெண்ட் செய்துள்ளதுடன் இவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!