விக்ரம் ,2.0, லியோ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகை மாயா இவர் பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் 2 nd ரன்னராக வந்தார். இதன் பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காமையினால் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்.
இதில் பல வீடியோக்களினை பதிவு செய்து வந்தார். சமீப காலமாக மஞ்சுளா டீச்சர் என நகைச்சுவை வீடியோக்களினை பதிவு செய்து வருகின்றார். இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகியது. இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
குறித்த பதிவில் " இனிமே என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்குமாறு உங்களுக்கு அன்புடன் கட்டளையிடுகிறேன் " என கூறியுள்ளார். மேலும் இவர் இந்த அறிக்கையினை மஞ்சுளா டீச்சராக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
Listen News!