• May 18 2024

பிரபல நடிகரின் படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகும் இலக்கியா சீரியல் நடிகை- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தைத் திருடாதே என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான்  ஹிமா பிந்து.

இந்த சீரியலில கிடைத்த பிரபல்யத்தைத் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பான இலக்கியா சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த சீரியலில் குறிப்பாக இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.


இந்நிலையில் தற்போது ஹிமா பிந்து சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் இதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருக்கிறார் என்றாலும் தற்போது ஹீரோயினாக முதல் முறையாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

கவுண்டமணி நீண்ட காலம் கழித்து தற்போது நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் தான் ஹிமா பிந்து ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.அந்த படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்களை ஹிமா பிந்து வெளியிட்டு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement