• May 08 2024

சரியோ பிழையோ வாழ விடுங்க... வயோதிபரால் கடுப்பான கோபிநாத்... நீயா நானா ஷோவில் நடந்த சம்பவம்...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள்" பலர் கலந்து கொண்டுள்ளனர். 


அதில் தாங்கள் எப்படி ட்ரெண்டியாக மாறினோம் என்று தங்களுடைய அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இதற்கு "இவர்கள் ட்ரெண்ட்டாக மாறியதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறி ஒரு சில இளம் தலைமுறையினர் விவாதித்தனர்.

இந்நிலையில் இளைஞர்கள் தரப்பில் இருந்து, தாத்தா பாட்டியின் உடல்தோற்றத்தில் தான் டிரெண்டியாக மாற்றம் ஏற்பட்டதே தவிர, இவர்களது சிந்தனை இப்போதும் பிற்போக்கான சிந்தனையாக தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக, சாதி, தன்பாலின திருமணம் பற்றி இளைஞர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது .


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரெண்டிக் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து "பால் புதுமையினரின் காதல் திருமணம் செய்து கொள்வதே எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  இப்படி தன்பாலின திருமணம் செய்து கொள்வது நம் கலாசாரத்தில் இல்லை" என்றும் கூறப்பட்டது. 

இதன் பின்னர் டிரெண்டிக் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து ஒரு நபர் கேள்வி எழுப்பினார். அதாவது "தன்பாலின திருமணம் செய்து கொள்ளலாம் என்று சில இளைஞர்கள் கூறி வரும் நிலையில்,  அப்போ அவர்கள் இதுபோன்று தான் இருக்கிறார்கள்" என்று சற்றும் யோசிக்காது அதிரடியாக கேள்வி எழுப்பினார். 

இதனால் கடுப்பான கோபிநாத் "ஒருவர் உரிமை சார்ந்த கேள்வி எழுப்பும் ஒரே காரணத்திற்காக நீயும் அதுதானா என்று கேள்வி கேட்பது? என்பது மிகவும் தவறான ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் குரல் கொடுக்கனும் நினைத்தால் எதற்குமே விடிவுகாலம் வந்திருக்காது.  இந்த உலகத்தில் எப்படி பல விஷயங்களும் விடிவு வந்தது என்றால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்ததால் மட்டும் அல்ல. அவர்களின் நியாயத்தை புரிந்துக் கொண்டு மற்றவர்கள் கூட்டுச்சேர்ந்து குரல் கொடுத்ததால் தான் மாற்றம் ஏற்பட்டது" எனக் கூறி அனைவரையும் வியக்கவைத்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "அவரவர்களுக்கு பிடித்தப்படி அவர்களை வாழவிடுங்கள். சரியோ தவறோ அவர்கள் விருப்பம்" எனவும் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றார் கோபிநாத்.

Advertisement

Advertisement

Advertisement