• May 18 2024

இனி காகம்- கழுகு கதை ட்ரோல் செய்யப்படும் போலயே... சோகத்தில் ரசிகர்கள்... குறைந்து போன லியோ வசூல்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ஒரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த 2வது படம் அக்டோபர் 19ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. வெளியான நாளில் இருந்து நல்ல வசூல் சம்பாரித்து வந்தது. இதனிடையில் தற்போது இப்படி ஒரு செய்தி கிடைத்துள்ளது. 

சென்னையில் படம் வெளியாகுமா இல்லையா என கடைசி வரை நிறைய பிரச்சனைகளை சந்தித்து தான் லியோ திரைப்படம் வெளியானது. ஒருவழியாக வெளியாகி முதல் நாளே ரூ. 148 கோடி முதல் நாளில் வசூலித்தது.


அதன்பிறகு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து படத்தின் வசூலும் நல்லபடியாகவே வந்தது. ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த விஜய்யின் லியோ பட வசூல் இப்போது குறைந்த வண்ணம் உள்ளது, வசூலில் வேகமே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது.

8 நாள் முடிவில் படம் ரூ. 470 கோடி வரை தான் வசூல் வந்துள்ளதாம். இப்படியே போனால் நடிகர் ரஜனியின் ஜெயிலர் பட வசூல் கிட்ட கூட போகாது போலயே அப்போ காகம் -கழுகு கதையை வைத்தே ட்ரோல் செய்வார்களே என விஜய் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement