• Aug 08 2025

தீபாவளிக்கு வரவிருக்கும் மாஸான விருந்து..! அடுத்த பட அப்டேட்டைப் பகிர்ந்த லெஜண்ட் சரவணன்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் லெஜண்ட் சரவணன் என்ற பெயர் இன்று தனி அடையாளமாக இருக்கிறது. தன்னுடைய முதல்படமான "தி லெஜண்ட்" மூலம் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்ற அவர், தற்போது தனது அடுத்த படத்தை தீவிரமாக உருவாக்கி வருகின்றார். தற்போது அதற்கான அதிகாரபூர்வ அப்டேட்டை சரவணன் நேரடியாக வெளியிட்டுள்ளார்.


லெஜண்ட் சரவணன் தனது அடுத்த திரைப்படம் குறித்து வெளியிட்ட முக்கியமான தகவல்களாக இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது என்பது காணப்படுகின்றது. பெரும்பாலான முக்கியக் காட்சிகள், பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் சீன்கள் அனைத்தும் முடிந்து விட்டன எனவும் கூறினார்.

அத்துடன், “இந்த தீபாவளி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் அளவுக்கு ஒரு மாஸ் சினிமா ரெடியா இருக்கு” என லெஜண்ட் சரவணன் கூறிய வார்த்தை ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமான கமெர்ஷியல் படமாக அல்லாமல், இப்படம் திரில்லர், ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் மாஸ் என நான்கும் கலந்த ஒரு பிரமாண்டமான திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


இப்படத்தின் தலைப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஆனால், “தலைப்பு ரொம்பவே மாஸா இருக்கும்!” என லெஜண்ட் சரவணன் உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஊகிக்கிறார்கள்.

Advertisement

Advertisement