• May 18 2024

தலைவர் 169 படத்தின் டைட்டில் வெளியானது-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜனிகாந்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த.இந்தப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவன தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹிட்டடித்தது. இதையடுத்து அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

எனினும் தற்போதைக்கு தலைவர் 169 என்று அழைக்கப்படும் அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். அவரின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால், தலைவர் 169 பட கதையில் நெல்சன் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப் படுகிறது.

இதனிடையே அப்படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை தொடர்ந்து அப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது தலைவர் 169 திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தின் தலைப்பு ஜெயிலர் என தகவல் பரவி வருகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் இந்த தலைப்பி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement