• Apr 27 2024

விக்ரம் பட பாணியில் வெளியாகவுள்ள தளபதி 67 படத்தின் அறிமுக வீடியோ- வாஃவ் வேற லெவல் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் தான் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இப்படத்தினை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின், பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் பல பிரபலங்களின் பெயர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் .


ஆனால், அதுவாக இருப்பினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரவுள்ளது.இந்நிலையில், அந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பே வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. ஆம், 67 வினாடிகள் உள்ள இந்த அறிவிப்பு வீடியோவில் விஜய் வருவார் என்றும் தெரிவித்திருந்தனர்.


அதன்படி, விக்ரம் பட பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்கின்றனர். இந்த வீடியோவிலேயே விஜய்யின் கதாபாத்திரம் குறித்து காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கானின் பதான் படத்தின் இடைவேளையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வீடியோ திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement