• May 01 2024

படவாய்ப்பிற்காக லாஸ்லியா செய்யும் மோசமான செயல்-திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.



இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவின் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அவருக்கு இருந்த மோகத்திற்காக இவருக்கென தனி ஆர்மி கூட உருவாக்கப்பட்டது, எனினும் பின்னர் இது வதந்தியாக மாறியது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா. அந்த வரிசையில் இறுதியாக ஹர்பஜன் சிங் மற்றும் சிவாவுடன் 'ப்ரெண்ட்ஸிப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து குவியவில்லை.



இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களின் பக்கமாக தனது கவனத்தை திருப்பியிருக்கின்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.இவ்வாறு இருக்கையில் கறுப்பு நிற ஆடையில் திடீரென ஓவர் கவர்ச்சியில் குதித்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இது லாஸ்லியாவா..பட வாய்ப்பிற்காக இப்படியா  என கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.






Advertisement

Advertisement

Advertisement