• Apr 27 2024

விரைவில் பிரபல நடிகரைக் கரம் பிடிக்கவுள்ள கியாரா அத்வானி... திருமணம் எங்கு தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான தோனியின் பயோபிக் படமான 'எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற படத்தில் சாக்ஷி வேடத்தில் நடித்து, அதன் வாயிலாக அதிகளவான நடிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை கியாரா அத்வானி.


இப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இருப்பினும் சமீபகாலமாக பாலிவுட்டில் தான் இவருக்கு அதிகளவான பட வாய்ப்புக்கள் வந்து குவிகின்றன. இதனால் அங்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கியாரா அத்வானி பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக, கடந்த ஓரிரு வருடங்களாக பல கிசுகிசுக்கள் வெளிவந்திருந்தன. அதுமட்டுமல்லாமல் அடுத்தகட்டத்திற்கு தங்களின் உறவை எடுத்து செல்ல இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவருமே தங்களின் திருமணம் குறித்து இதுவரை, வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாகவும், ரகசியமாகவும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


அத்தோடு கியாரா அத்வானி தங்களின் திருமண உடை குறித்து, விவாதிப்பதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் ஷர்மாவை அவருடைய வீட்டில் சந்தித்து விவாதித்தும் இருக்கின்றார். இதற்காக அவர் வந்து சென்ற சில வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் இவர்களின் திருமணம், ராஜஸ்தானில் உள்ள  ஜெய் சாலிமர் பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரையுலகை சேர்ந்த நெருங்கிய பிரபலங்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அதே சமயத்தில்  இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனங்களுக்கு கொடுப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதனால் விரைவில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பை இவர்கள் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணையவிருக்கும் அந்த நாளினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement