• Apr 25 2024

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்.. வெளிநாட்டிற்கு செல்லும் ஷங்கர் & கமல்ஹாசன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 படத்தின் வெளிநாடு படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.மேலும் இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.


முத்துராஜ் கலை இயக்குநராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. மேலும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.


பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறுஇருக்கையில் இந்தியன் 2 படத்தின் தற்போதைய திருப்பதி படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் ஷங்கர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்கா நாட்டில் 15 நாட்கள் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப் படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்வதற்கான  விசா நடைமுறைகள் முடிந்ததும் படப்பிடிப்பு தேதிகள் முடிவாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement