• Mar 19 2024

யோகி பாபுவின் பொம்மை நாயகி படத்தின் டுவிட்டர் விமர்சனம்- ரசிகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருபவர் தான் யோகிபாபு. அந்த வகையில் இவர் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் பொம்மை நாயகி. இன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷான் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா, பேபி ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


மிகவும் அழுத்தமான கதையாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.ஏற்கனவே இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பல பிரபலங்கள் யோகி பாபுவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருந்தனர். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என பலரும் கூறி வந்தனர். தற்போது அதையே ரசிகர்களும் தெரிவித்து வருவது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் ஒரு ஆழமான பிரச்சனையை அழகாக இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் யோகி பாபு இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு முன்னதாக அவர் நடித்திருந்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அந்த லிஸ்ட்டில் தற்போது இந்த பொம்மை நாயகியும் இணைந்து இருக்கிறது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


அவருக்கு அடுத்தபடியாக பேபி ஸ்ரீமதியும் தன் நடிப்பால் மிரள வைத்திருக்கிறார். அதிலும் நீதிமன்ற காட்சியில் அவர் பேசும் வசனம் பலரின் கைத்தட்டலையும் பெற்றுள்ளது. இதையே ரசிகர் ஒருவர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நடக்கும் காட்சிகள் அனைத்தும் சமூகத்தில் நடப்பவை தான் என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் பொம்மை நாயகி திரைப்படத்திற்கு இப்போது பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement