• May 18 2024

மேடையில் வைத்து திடீரென தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட கமல்…இணையத்தை கலக்கும் வீடியோ…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாகவும், உலக நாயகனாகவும் கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் நடிப்பிற்கும் சுவாரஸியமான கதைக்கும் என்றே தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் என்று கூறுமளவிற்கு இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் உடனே வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த 'விக்ரம்' படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரியளவில் வசூலை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலில் "விக்ரம்" இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலாவது இடத்திலும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தோசத்தை கொண்டாடும் விதமாக நம்ம உலக நாயகனின் ரசிகர்கள் அவரின் கடந்தகால போட்டோஸ் மற்றும் வீடியோக்களினை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல் ஹாசன் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது அந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனுடன் இணைந்து அவரது மனைவி சரிகா, மற்றும் மகள் சரிகாவும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவில் கமல் அவரின் மனைவி பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த மேடையில் வைத்து திடீரென தன் மனைவிக்கு முத்தமிட்டிருக்கின்றார்.

உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தக் குறும்புத்தனமான வீடியோவை தான் தற்போது அவரின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவைப் பார்க்கும் போது நம்ம உலகநாயகன் முன்னர் காதல் நாயகனாக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோணுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement