• May 18 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் ஜி.பி.முத்துவுக்கு எச்சரிக்கை விடுத்த கமல்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் ஆரம்ப விழா தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர் தான் ஜிபி முத்து.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி முன்னதாக 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

கடந்த சில வாரங்களாக பல்வேறு ப்ரமோக்களுடன் ரசிகர்களை ஆரவாரப் படுத்திவந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல வித்தியாச முயற்சிகளுடன் ஆரம்பமாகி உள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியிலும் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி இன்று துவங்கி 100 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கை என 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். முதல் போட்டியாளராக பிரபல யூடியூபர் ஜிபி முத்து  உள்நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அவருடன் கமல் பேசினார்.



நான்கு குழந்தைகள், தம்பி இறந்துவிட தம்பியின் குடுமபத்தையும் இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வருவதாக ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.அத்தோடு  கொரோனா லாக்டவுன் காலத்தில் தற்கொலை முயற்சி செய்த ஜிபி முத்துவிற்கு கைக்கொடுத்தது டிக் டாக் என்றும் அவர் அதில்  பகிர்ந்துக் கொண்டார்.

இதையடுத்து அவரது வழக்கமான ஸ்டைலில் யாரையும் திட்டக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தினார் கமல்ஹாசன். இதையடுத்து தனியாக பிக்பாஸ் வீட்டிற்குள் விடப்பட்ட ஜிபி முத்து தனக்கு ஒருமாதிரியாக வருவதாகவும் யாரையாவது உடனடியாக அனுப்பவும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக அவரது குடும்பத்தினர் வந்திருந்து அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement