தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ்.
100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. அதாவது இன்று மாலை 7மணிக்கு பிக்பாஸ் குறித்த வெறித்தனமான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. அது என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.
பெரும்பாலும் அது பிக்பாஸ் ஆடியோ லாஞ்சுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் அந்த வெறித்தனமான அப்டேட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!