• May 18 2024

இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கமல் ஹாசன்.. வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹசன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய படம் இந்தியன் 2.

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. லஞ்சம் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கு கொலை மிரட்டல் விடும் சுதந்திரப் போராட்ட வீரரின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும்  முதல் பாகத்தின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2020ம் ஆண்டு கிரேன் சரிந்து விழந்து விபத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் அதையடுத்து கொரோனா தொற்று ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனை என பல ஆண்டுகள் இந்தியன்2 ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. எனினும் இதையடுத்து, ரெட் ஜெயண்ட் உதவியோடு அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகியது.



இந்நிலையில், அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்த தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஏற்கனவே சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த வந்த நிலையில், இன்று இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் ஹாசன் இணைந்துள்ளார்.

மேலும் அங்கிருந்து ஷங்கர் மற்றும் கமல் இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement