• May 19 2024

ஜு.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அடியே திரைப்படம் வெளியாகிய 4 நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் ஜு. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அடியே.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகியது.


தற்போது அடியே படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 8.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தோடு இனி வரும் நாட்களிலும் இப்படம் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement