• Oct 08 2024

இவர் என்ன பாடகியா? கிளாமர் நடிகையா? நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் ஜொனிதா காந்தி..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல பாடகி ஜொனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் இவர் என்ன பாடகியா? அல்லது கிளாமர் நடிகையா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, உருது, ஆங்கிலம் என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் ஜொனிதா காந்தி என்பது தெரிந்தது.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ’ஓ காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஏஆர் ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி இமான் உட்பட பல பிரபலங்களின் இசையில் இவர் பாடியுள்ளார் என்பதும் சமீபத்தில் கூட சந்தானம் நடித்த ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஜொனிதா காந்தி திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் தனது தோழியுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

’நீங்கள் தான் கிளாமர் குயின்’ என்றும் ’இந்த புகைப்படத்திற்கு தான் வெயிட்டிங்கில் இருந்தேன்’ என்றும் ’சூரிய ஒளியே உங்கள் அழகை பார்த்து மங்கி விட்டது’ என்றும் பல ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement