• Jan 19 2025

சிறகடிக்க ஆசையில் ஸ்ருதியும் முத்துவும் சேர்ந்துடுவாங்களா? ரவி கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் காணப்படுகிறது.

இந்த சீரியலில் உள்ள கதாபாத்திரங்களும் சாதாரண வாழ்க்கைக்கு ஏற்ப, அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்கள், திருப்பங்கள், தந்திரங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.

இந்த சீரியலில் ஸ்ருதி, ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்து முடிந்துள்ளது. அதில் மீனா மீது வாசுதேவன் திருட்டுப் பலி போட, முத்து அவரை அடித்து விடுகிறார். இதனால் ஸ்ருதி கோவத்தில் விஜயா வீட்டிக்கு வராமல் தனது தாய் வீட்டிலையே இருக்கிறார்.

மறுப்பக்கம், ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனுக்கு அவரது அப்பா வராத நிலையில், தற்போது ரோகிணி கர்ப்பம் என பொய் சொல்லுகிறார். ஆனாலும் இன்றைய எபிசோடில் அவர் கர்ப்பம் இல்லை என்பதை விஜயாவுக்கு தெரிவிக்கிறார்.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரவியாக நடிக்கும் பிரணவ் கலகலப்பாக பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

ஆரம்பத்தில் எனக்கு பிரண்ட்ஸ் மூலம் தான் எனக்கு நடிக்க ஆசை வந்தது. ரீல்ஸ், யூடியூப் எல்லாம் செய்து இருக்கன். ஆனா அதுல அவ்வளவு இன்டெர்ஸ்ட் இல்ல. நடிக்கிறதுக்கு ரொம்ப ஆசைப்பட்டன். அதுக்கு பிறகு திடீரென விஜய் டிவிக்கு வந்துட்டேன். நான் நடிக்க வந்த பிறகு தான் என் நண்பர்களுக்கே சொன்னன்.

இந்த செட்ல எல்லாருமே நல்லா என்ன கவனிக்கிறாங்க. அது எனக்கு சந்தோசம். ஆரம்பத்துல நான் இந்த சீரியலுக்கு நடிக்க வரும்  போது என்ன செப் ஆகவே இயக்குனர் பாத்தாரு. முதல்ல என்  நகங்களை நீட்ட சொல்லி பார்த்தாரு. அதுக்கப்புறம் நான் வீட்டுல ட்ரைனிங் கூட எடுத்திருப்பேன்.


மேலும், எங்க செட்ல அதிகம் ரில்ஸ் பண்றது கோமதி பிரியா தான். டச்அப் பண்றது என்றா நானும் ரோகிணியும் தான். வெளில இருக்கிற மக்கள் எல்லாரும் வீட்ல ஒருவராகவே எங்களையே பார்க்க தொடங்கிட்டாங்க. சீரியல் பாக்குறது பொம்பளைகள் மட்டுமின்றி ஆம்பளைகளும் அதுல இன்ட்ரஸ்ட் காட்றாங்க. வெளியில போனா அவங்களாவே வந்து பேசுறாங்க.

இந்த சீரியல்ல ஸ்ருதி கேரக்டரும் முத்து கேரக்டரும் ஒன்று தான். ஒன்று ஆம்பள வெர்ஷன் என்றால் இன்னொன்று பொம்பள வெர்ஷன். அவங்க ரெண்டு பேரைரும் எப்ப சேருவாங்க என்று நானும் ஆடியன்ஸ் போல எதிர்பார்த்து இருக்கிறேன். அவர்கள் சேர இல்லை என்றாலும் நல்லா தான் இந்த சீரியல் போகும்.

மேலும் இன்னும் ஒரு வெப் சீரியலில் நடக்கிறதுக்கு கமிட் ஆகி இருக்கன். ஆனா அது தொடர்பிலான உறுதியான தகவல் இன்னும் வெளியிட இல்லை என்று கூறியுள்ளார் பிரணவ்.

Advertisement

Advertisement