• Jul 27 2024

இன்று திருமண நாளை கொண்டாடும் ‘ஜோடி’ ஆனந்தி.. மீண்டும் விஜய் டிவியில் ரீஎண்ட்ரி?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆனந்தி இரண்டு குழந்தைகள் பெற்ற பின், தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 2ஆம் தேதி இன்று ஆனந்தி தனது கணவர் அஜய் மற்றும் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு விஜய் டிவி நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு சின்னத்திரையில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் அந்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்தி வந்த நிலையில் தான் அவருக்கு அஜய் உடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து அவர் தற்காலிகமாக ஓய்வு எடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்க  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்தி நடிக்க இருக்கும் தொலைக்காட்சி தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் ஆனந்தி மற்றும் அஜய் ஆகிய இருவரும் தங்களது இரண்டாவது மகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடினார்கள் என்பதும் இந்த பிறந்தநாள் விழாவுக்கு விஜய் சேதுபதி, ஆர்யா உட்பட திரை உலக நட்சத்திரங்கள், பல சின்னத்திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement