சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், உண்மையெல்லாம் தெரிந்த முத்து மனோஜை கூண்டில் நிற்க வைத்து வழக்கு விசாரணை பண்ணுகின்றார். ஜீவா மனோஜை ஏமாற்றி 27 லட்சத்தை கனடாவுக்கு எடுத்துக் கொண்டு போன விடயம் தான் நம்மளுக்கு தெரியும். தெரியாத உண்மை ஒன்றும் உள்ளது என சொல்லுகின்றார்.
அதன்படி ஜீவா திரும்ப வந்து வட்டியுடன் 30 லட்சம் கொடுத்ததாகவும் அதனை இரண்டு பேரும் வாங்கித் தான் கடையை ஆரம்பித்ததாகவும் சொல்லுகின்றார். ஆனாலும் மனோஜ் முத்து பொய் சொல்வதாக சொல்ல, ரோகிணியும் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா என்று கேட்கின்றார்.
இதை கேட்ட முத்து ஆதாரம் இருக்கு என்று ஜீவாவை உள்ளே அழைக்கின்றார். ஜீவாவை பார்த்த மனோஜ் ரோகிணியும் ஆடிப் போகின்றார்கள். ஜீவா அண்ணாமலையிடம் வந்து நடந்த உண்மைகளை சொல்லி மன்னிப்பு கேட்கின்றார். அத்துடன் மனோஜ் என்னிடம் காசு வாங்கியிருக்கவே முடியாது. ரோகிணி தான் வட்டியுடன் வாங்கினார் என்று சொல்லுகின்றார்.
ஆனாலும் தனக்கு எதுவும் தெரியாது, முத்துவும் ஜீவாவும் நாடகமாடுவதாக ரோகிணி சொல்லுகின்றார். இதன் போது ஜீவா போலீஸ் ஸ்டேஷனில் காசு கொடுத்த காப்பி, மனோஜ்க்கு காசு அனுப்பிய பேங்க் ஸ்டேட்மென்ட் எல்லாவற்றையும் காட்டி ரோகினியின் முகத்திரையை கிழிக்கின்றார். மேலும் தான் முத்துவுக்காக தான் உண்மையை சொல்ல வந்ததாகவும் சொல்லிச் செல்கின்றார்.
இதை தொடர்ந்து அண்ணாமலை மனோஜை அழைத்து நீ திருந்த மாட்டியா? சொந்த குடும்பத்தை ஏமாத்திட்டு இருக்கியா என்று கேட்டு திட்டியதோடு, விஜயாவும் மனோஜின் சேட்டை பிடித்து திட்ட அவர் எல்லா ஐடியாவும் ரோகிணி தான் தந்த என்று ரோகிணியை மாட்டி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!