விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் கலகலப்பான காமெடி குக்கிங் ஷோவாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்துள்ளது .
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் முதல் நான்கு சீசனிலும் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். இந்த நான்கு சீசன்களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது.
இந்த ஆண்டு விஜய் டிவிக்கும் மீடியா மேசன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகினார். இதனால் புதிய நடுவர், புதிய போட்டியாளர்கள் என்று புதிய டீமுடன் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.
அத்துடன் இந்த சீசனில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் போட்டியாளராக இருந்த பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அடுத்த சீசன் முதல் இந்த நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைத்த மீடியா மேசன்ஸ் நிறுவனமே விலகிவிட்டதால் அதே பெயருடன் தொடருவதற்கு விஜய் டிவி தரப்பு விரும்பவில்லை. இதனால் பெயரை மாற்றி புது பெயருடன் இந்த நிகழ்ச்சியை கொண்டு நகர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகின்றதாம். எனவே குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் ஆரம்பிக்கப்படும் போது புதிய பல மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதியாக கூறப்படுகிறது.
Listen News!