அகிலன் படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அகிலன்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு மறைந்த பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. எனினும் இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகுமென ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.