• May 19 2024

ஜனனி வெளியே போயும்.. அவரை வைச்சே வீட்டிற்குள் மீண்டும் சண்டை போடுறாங்களே.. வெளியானது மாஸ் ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றைய தினம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஷிவின் தனலட்சுமியிடம் சென்று, அண்டைக்கு நாங்க சண்டை போட்டப்போ தனா உள்ள போ என்று சொன்னதும், ஜனனி உள்ள போ என்று சொன்னதும் இரண்டுமே ஒன்றுதான் என அசீம் கூறுவதாக சொல்கின்றார்.

தனலட்சுமி அசீமிடம் சென்று "ஜனனி உள்ள போனதுக்கு நீங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க, அவ உள்ள போகணும் என்று நான் நினைச்சன் அதனால இரண்டு போரையும் ஹோல்ட் பண்ணி அவளை உள்ள போக்கவச்சேன் என்று தானே நீங்க எங்கிட்ட சொன்னீங்க" எனக் கூறுகின்றார்.

அதற்கு அசீம் அப்படி நான் சொல்லவே இல்லையே என அதட்டுகின்றார். அதற்கு ஷிவினும், தனாவும் ஜனனி உங்களுக்கு கை கொடுத்து அழுதிட்டு போகும் போது நீங்க சொல்லலையா எனக் கேட்கின்றனர். அசீம் உடனே அதற்கு ஷிவின் தேவை இல்லாமல் எதற்க்கு என் பேர் எடுக்கிறா எனத் தெரியல" எனக் கூறுகின்றார்.

மேலும் தனா வெளியே எல்லாருமே பார்த்திட்டு இருக்காங்க எனக் கூறிச் செல்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement