• Oct 09 2024

துபாய் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் ஜவான் படம் ரிலீஸ் - மகிழ்ச்சியின் உச்சத்தில் அட்லீ மற்றும் அனிருத்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அனிருத் இசை அமைப்போடு உருவாகிய திரைப்படம் 'ஜவான்' இப்படத்தில் ஹிரோவாக ஷாருக்கான் நடித்து இருக்கிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர் அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இப்படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகஇருக்கிறது. அந்தவகையில் இந்தப் படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்! கடந்த சில நாட்களுக்கு முன்வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான 'ஹையோடா' பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.



அத்தோடு ஜவான் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில் டிரைலர் வீடியோவிற்கே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.


 இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த டிரைலரை உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தான் ரிலீஸ் செய்தனர் இதனை பார்வையிட சென்ற இயக்குனர் அட்லீ மற்றும் அனிருத் புர்ஜ் கலிஃபா கோபுரத்தின் முன் இருந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை டுவிட்டர் இன்ஸராகிரேம் போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளர். "நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகவும் " மகிழ்ச்சியுடன் இருவரும் தங்கள் பெயர் கோபுரத்தில் வரும் பொது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement