• Apr 07 2026

இவ்வளவு சிம்பிளா இருக்காங்களே.! விரோஷ் ஜோடி குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ் போட்டோஸ் இதோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் "நேஷனல் கிரஷ்" என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளை சமீபத்தில் சிறப்பாகக் கொண்டாடினார். அவர் ஹைதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் குழுவினரோடு பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், அவர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா, தேனிலவு பயணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், திருமணமான ஒரே மாதத்தில் ராஷ்மிகா திடீரென வெளியிட்ட புகைப்படம் ஒன்று கர்ப்ப வதந்திக்கு வழிவகுத்தது.


மேலும், தற்போது படப்பிடிப்புகளில் மிகவும் பிஸியாக இருக்கும் ராஷ்மிகாவின் கைவசம்  6 மெகா படங்கள் உள்ளன. அதன்படி, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் வரலாற்று ஆக்‌ஷன் படம் ரணபாலி, அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் படம், புஷ்பா 3, அனிமல் 2 என வரிசையாக பெரிய படங்கள் காத்திருக்கின்றன.

இதற்கிடையில் Dear Diary என்ற பெயரில் பர்ஃபியூம் பிராண்டையும் தொடங்கி, வணிக உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் ராஷ்மிகா.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்த ஜோடியை பார்த்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement