• May 09 2024

'அது லுங்கி அல்ல, அது வேட்டி'.. சல்மான்கானின் செயலைக் கண்டு...கொதித்தெழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இயக்குர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement