• Apr 28 2024

இதை உபயோகப்படுத்தியிருப்பது பெருமையாக இருக்கிறது- சத்தியராஜின் புதிய படத்தை பாராட்டிய வடிவேலு

stella / 8 months ago

Advertisement

Listen News!

சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும்  திரைப்படம் தான் வெப்பன். நடிகர் சத்தியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் வசந்த் ரவியும் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. 

புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் என்பவர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.


இந்த நிலையில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் வடிவேலு இப்படத்தை வாழ்த்தியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது  "என் அன்பு அண்ணன் சத்யராஜ் 'வெப்பன்' படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார்.  

முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. 'வெப்பன்' படத்தினை எல்லோரும் தியேட்டரில் பார்த்து மகிழுங்கள். இப்போது டீசரை பார்த்துக் கொண்டாடுங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement