• May 12 2024

விஜய்டிவி தொகுப்பாளினி ஜக்குலினின் வீடு இது தானா?- வைரலாகி வரும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் ஜாக்குலின்.இந்த நிகழ்ச்சியில்  ரக்ஷனுடன் இவர் இணைந்து செய்த சேட்டைகள் ஏராளம் என்பதோடு இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன.


இதனை அடுதது இயக்நுர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய தேன்மொழி சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.


பின் சீரியல் பாதியிலேயே முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் முடிந்தது.மீண்டும் தொகுப்பாளினியாக கலக்குவார் என்று பார்த்தால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பயங்கரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது பயிற்சியின் போது எடுக்கப்படும் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார்.


இது தவிர தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.அதன் மூலம் பல வீடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது தனது வீட்டை சுற்றி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement