• May 18 2024

சூர்யா 42 படத்தின் டைட்டில் இது தானா?-ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என்ற வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிஷம் மட்டுமே வந்த ரோலக்சை அவரது ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள்.

தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த கட்டபடப்பிடிப்பை விரைவில் தொடங்கி, படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில், சூர்யா 42 படத்திற்கு வீரம், விஸ்வாசத்தைப் போல செண்டிமென்டான 'வி' என்ற தொடங்கும் எழுத்தில் தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க இருப்பதால் இப்படத்திற்கு 'வீர்' என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில், துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணால் தாகூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா 42 படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள நிலையில், மிருணால் தாகூர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.



Advertisement

Advertisement